இப்போது தமிழகத்தில் பரபரப்பான விஷயம் என்னªன்றால் அது லட்சுமி ராமகிருஷ்ணன்தான். அவர் நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டு விட்டார் எனவும், அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமும் உள்ளது.
இந்த நிலையில் அவர் ரஜினி, கமலிடம் கெஞ்சியமாக கூறி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஹாசினி என்ற சிறுமியை தஷ்வந்த் என்ற வாலிபர் பலாத்காரம் செய்து கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக முதன் முதலாக பொங்கி எழுந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன்தான்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த தஷ்வந்த் சமீபத்தில் ஜாமீனில் வெளியில் வந்தார். அதோடு தனது தாயையும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டான்.
இந்த நிலையில் இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது, தஷ்வந்த் ஜாமீனில் வெளிவருகிறான் என தெரிந்ததும், நான் இது குறித்து ரஜினி, கமல் குரல் கொடுக்க வேண்டும் என்று டுவிட் செய்தேன்.
அப்படி அவர்கள் அப்படி குரல் கொடுத்து இருந்தால் இன்று இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது என்றார்.

0 comments: