பிரபல ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இதனை தொகுத்து வழங்குபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்தே தூக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மையின் 1500வது எபிசோட் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது.
அதில் லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவர் ராமு குட்டன் என்ற ராமகிருஷ்ணன் வந்திருந்தார். அவர் தனது மனைவி மீது அடுக்கடுக்காக புகா அளித்தார். அதில் ஊரில் உள்ள எல்லா பிரச்னைகளையும் தனது மண்டையில் போட்டு கொள்கிறார்.
சினிமா பார்த்து சரியில்லை என்றால் அதை டிவிட்டரில் கிழி கிழி என கிழித்த தொங்க விடுவார் என கூறினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலாக மதுரை ராமர் நடுவராக தொகுத்து வழங்கினார்.
Ôலட்சுமி ராமகிருஷ்ணன் பிரச்னைகளை கூறும் இடத்தில் அமர வைக்கப்பட்டார். அவரும் அவரது கணவரின் குறைகளை கூறுவது போல இந்த 1500வது எபிசோட் ஒளிபரப்பப்பட்டது. 1500வது எபிசோட் ஸ்பெஷலாக ஒளிரப்பப்பட்டது. ஆனாலும் இது பார்க்க சுவாரசியமாக இருந்தது.

0 comments: