Monday, 11 December 2017

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயரை வெளியிடுவேன்..! பிரபல நடிகையின் அதிரடியால் ஆடிப்போன திரையுலகம்...!!


சினிமாவில் வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனை பல நடிகைகள் ஒப்பு கொண்டுள்ளனர். குறிப்பாக பாலிவுட்டில் பல நடிகைகள் தாங்கள் சினிமா வாய்ப்பிற்காக அடைந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், சோனம் கபூர், வித்யா பாலன், ராதிகா ஆப்தே என பல முன்னணி நட்சத்திரங்கள் இதுக்குறித்து பேசியுள்ளார்கள், இதில் கங்கனா ரனவத் மட்டுமே தான் யாரால் பாதிக்கப்பட்டேன் என்று கூறினார். மற்ற நடிகைகள் அனைவரும் யாருடைய பெயரையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் கேங்ஸ் ஆப் வஸ்சேபர் படத்தில் நடித்த ரிச்சா சட்டா பாலியல் தொல்லை குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இவர் கூறுகையில், பாலியல் தொல்லைகளை நானும் அடைந்துள்ளேன், நான் அவர்கள் பெயரை கூட வெளியிட தயார். ஆனால், என் குடும்பத்தினருக்கு எதுவும் ஆகாது என்று அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

சொன்ன பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று ஒரு சில கண்டிஷன் விதித்துள்ளார், இவர் இப்படி பேசியிருப்பதற்கு பல ஆதரவுகள் குவிந்து வருகின்றது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: