Thursday, 28 December 2017

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண் பலாத்காரம்..! பிரபல நடிகர் மீது போலீசில் புகார்...!!


பொதுவாக சினிமா நடிகர்கள் என்றாலே இளம்பெண்களுக்கு ஒருவித ஈர்ப்பு இருக்கும். அவர்களை திருமணம் செய்து குடும்பம் நடத்த வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி ஒரு பிரபல நடிகரை நம்பி ஏமாந்த ஒரு பெண்ணை போலீசில் புகார் அளித்துள்ளார்.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பர் சுப்பிரமணியா. இவர் கன்னடத்தில் கொம்பன்னா உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கும் பெங்களூரு பசவனகுடியை சேந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வீட்டில் விருந்து உள்ளது என அழைத்து சென்று குளிர்பானம் கொடுத்துள்ளார். அதனை குடித்த உடன் அந்த பெண் மயங்கிய உடன் அவரை பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்து பார்த்தபோது அந்த பெண்ணின் உடலில் உடைகள் எதுவும் இல்லை. சுப்பிரமணியாவும் இல்லை.

இது குறித்து அவரிடம் கேட்டபோது திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து என்னை அலட்சியம் செய்ய ஆரம்பித்துள்ளார். இது குறித்து கேட்டபோது என்னை வைத்து படம் எடுக்கும் அளவுக்கு வசதி படைத்த பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன்.

உனக்கு அந்த அளவுக்கு வசதி இல்லை. மேலும் சினிமா துறையினர் வந்தால் அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: