மெர்சல் படத்தின் பக்கா மாஸ் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்-உடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். ஏற்கனவே, விஜய் - முருகதாஸ் கூட் டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி ஆகிய இரண்டு திரைப்படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.
இந்நிலையில், தளபதி62 படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது என்று ஒரு பக்கமும், லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று மறுபக்கமும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், நாங்கள் தான் தளபதி62 படத்தின் தயாரிப்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன்பிக்சர்ஸ் நிறுவனம்.
தளபதி62 குறித்து வெளிவந்த முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: