Tuesday, 5 December 2017

விரைவில் கைதாகப்போகிறார் விஷால்..! வேட்பு மனு நிராகரிப்பின் ரகசியம் என்ன தெரியுமா?


விஷாலின் வேட்புமனு எதனால் நிராகரிக்கப்பட்டது என்று விசாரிக்கையில். அவரது வேட்புமனுவை முன்மொழிந்தவர்களில் இருவரது கையொப்பம் போலியானது என்றும். இதனை அந்த கையெழுத்துக்கு சொந்தக்காரர்களே நேரில் வந்து இது தங்களின் கையெழுத்து இல்லை என தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள்.

மேலும், தன்னுடைய பல்வேறு வங்கிக்கணக்குகளின் பணம் இருப்பு நிலை மற்றும் சொத்து விபரங்களை மறைத்து நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என கூறுகிறார்கள். இதனால், விஷால் மீது வழக்கு பாயும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், விஷாலை ஆதரித்து கையொப்பமிட்ட இருவரின் வீட்டில் உள்ள பெண்களை பிரபல அரசியல் கட்சியினர் மிரட்டி கையெழுத்தை நாங்கள் போடவில்லை என்று கூறுமாறு மிரட்டி பணம் கொடுத்தனர் என்று  விஷாலின் ஆதவாளர்களில் ஒருவர் விஷாலிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார் இந்த ஆடியோ வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: