இந்திய சினிமாவின் அடையாளமாக கருதப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மட்டுமின்று இந்திய சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலரும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் சேவாக் ரஜினிக்கு ட்விட்டரில் வித்யாசமான முறையில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா... நீங்கள்தான் இப்போதும் எப்போதும் சூப்பர் ஸ்டார்! இன்றுபோல் என்றும் நீங்கள் அன்பில் நனைந்திருங்கள்! @superstarrajini" என சேவாக் ட்விட்டியுள்ளார்.

0 comments: