இப்போதெல்லாம் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராகி விட்டார் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் தான் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் முதலிரவு படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மற்ற நடிகைகள் போல சமந்தா திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை நிறுத்திவிடாமல் அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் தெலுங்கில் ராம் சரன் தேஜாவுடன் ரங்கஸ்தலம் படத்தில் நடித்து வருகிறார். சில நாட்கள் முன்பு சமந்தா கிராமத்து பெண் வேடத்தில் உள்ள ரங்கஸ்தலம் படத்தின் புகைப்படங்கள் லீக்காகி வைரலானது.
ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. இதுபற்றி படக்குழு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.


0 comments: