விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் தாடி பாலாஜி. இவருக்கும் இவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுள்ளது.
சின்னத்திரையில் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கூட குழந்தைகள் பங்கேற்கும் கிங்ஸ் ஆப் காமெடி நிகழ்ச்சியின் எபிசோட்டில் கடந்த வாரம் கலந்து கொண்டார்.
இதில் குழந்தைகளின் திறமையை பாராட்டி பேசியவர் இவர்களை பார்க்கும்போது எனது மகள் போர்ஷிகாவை நான் மிஸ் செய்கிறேன் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது பார்வையாளர்களை நெகிழ வைப்பதாக இருந்தது.

0 comments: