சன் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் மணிமேகலை. இவர் சமீபத்தில் பெற்றோரின் கடும் எதிர்ப்பை மீறி ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஹுசைனுக்கும் தனக்கும் எப்படி காதல் மலர்ந்தது என்பது குறித்து மணிமேகலை சமீபத்தில் கூறும்போது, ஒருநாள் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ஆடலுடன் பாடலை பார்த்த போது லாரன்ஸ் மாஸ்டருடன் ஆடிய டான்சரை கவனித்தேன்.
இவரை பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. எனவே அவரது நம்பரை வாங்கி பேசினேன். பிரபல தொகுப்பாளினி என்பதால் கொஞ்ச நேரமாவது பேசுவார் என்று நினைத்தால் நன்றி என்ற ஒரே வார்த்தையில் கட் பண்ணி விட்டார்.
இந்த குணம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அப்புறமா அவருடன் தொடர்ந்து பேசி பழகினேன். ஒருநாள் அவரை ஹைதராபாத்துக்கு காரில் தனியாக போய் சந்தித்து காதலை சொன்னேன். அப்புறமாக தான் அவர் ஒத்துக்கிட்டார்.
ஆனால் என் அப்பா, ஹசைன் வேறு மதம் என்பதால் எனக்கு வேறு வரன் பார்த்தார். எனவேதான் அவசர அவசமாக திருமணம் செய்ய வேண்டியதாகிவிட்டது என்று கூறியுள்ளார்.

0 comments: