Sunday, 24 December 2017

தேர்தல் முடிவு பயத்தில் எடப்பாடி , ஒபிஎஸ் எங்கு இருக்கின்றனர் தெரியுமா.!



நடந்து முடிந்த ஆர்.கே நகரில் தினகரன் பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாங்கிய ஓட்டுகளை விட தினகரன் இந்த முறை அதிக வாக்குகளை கைப்பற்றியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் திமுக மற்றும் அதிமுகவுக்கு தினகரன் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளார் அடுத்த தமிழக அரசியலில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்று தெரியவில்லை.

இந்நிலையில் இந்த தேர்தல் முடிவை பற்றி ஒபிஸ்,எடப்பாடி, தமிழிசை , திமுக யாரும் இதை பற்றி ஒரு பேட்டி கூட அளிக்கவில்லை.

அதே நேரத்தில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் .

அதில் ஆர்.கே நகர் இடைதேர்தலில் தினகரனின் குக்கர் வெடித்து ஒபிஎஸ் மற்றும் எடப்பாடி படுகாயம். இரட்டை இலையை விரித்து சாப்பிட உட்கார்ந்த போது நடந்த பரிதாபம்.

அப்போது சத்தம் கேட்டு வந்த தமிழிசைக்கு குக்கர் விசில் மூக்கின் மீது பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் காலை முதல் சூரியனை காணவே இல்லை கிண்டலாக கூறியுள்ளனர்.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: