பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழர்களின் வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி. இவர் இதனை வைத்தே தற்போது பிரபலமாகி வருகிறார்.
இவருக்கு நடிகை மற்றும் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பது ஆசை. இதில் தொகுப்பாளர் ஆசையை கலைஞர் டிவி நிறைவேற்றி விட்டது. அதோடு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தற்போது விளம்பரத்திலும் நடிக்க தொடங்கி விட்டார்.
அதன்படி ஜூலி அப்பளம் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். கணவர், மாமனார், மாமியார் சகிதமாக எடுக்கப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் ஜூலிதான் மருமகள்.
அந்த 5 செகன்ட் டயலாக் அதில் ஜூலியின் ஃபேவரைட் டயலாக்கான அந்த '5 செகன்ட்' என்ற டயலாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் வழக்கம் போல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

0 comments: