Friday, 22 December 2017

ஜனவரி 4ம் தேதி ரஜினி புது கட்சி அறிவிப்பு..! அதிரடி பிளான் ரெடி..! ரசிகர்கள் உற்சாகம்...!!


ரஜினியின் அரசியல் பிரவேசம் அறிவிப்பு புலி வருகிறது கதையாகி விட்டது. கடந்த சில நாட்களாக அடங்கி இருந்த ரஜியின் அரசியல் பிரவேச அறிவிப்பு தற்போது மீண்டும் சூடு பிடித்து விட்டது.

ரஜினிகாந்த் தனது பிறந்த நாளில் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு அறிவிப்பு வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனிடையே ரஜினிகாந்த் வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதித்தனர். மேலும் இந்த நாட்களில் தலைவர் ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்பினர்.

இதனிடையே கட்சிக் கொடி, சின்னம், பெயர், நிர்வாகிகள் குறித்த பட்டியல் என அனைத்தும் தயாராகிவிட்டதாகவே கூறப்படுகிறது. அரசியல் பிரவேசம் எப்போது காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக உள்ள தமிழருவி மணியன் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளிக்கையில்,

ரசிகர்களுடனான சந்திப்பின்போது தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரஜினி நிச்சயம் அறிவிப்பார் என்று கூறியிருந்தார். இதனால் எதிர்பார்ப்புகள் கூடின.

இந்நிலையில் வரும் 26-ஆம் தேதி செய்தியாளர்களை ரஜினி சந்திக்கவுள்ளதாகவும் அன்றைய தினம் தனது அரசியல் பிரவேசம் எப்போது என்பதை நிச்சயம் அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக வரும் ஜனவரி 4-இல் புதுக் கட்சியை ரஜினி தொடங்கிவிடுவார் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: