Wednesday, 27 December 2017

வசிப்பதற்கு வீடு கூட இல்லாமல் தவிக்கும் கமலின் முன்னாள் மனைவி சரிகா.! அதற்கு என்ன காரணம் தெரியுமா.!!



குழந்தை நட்சத்திரமாக தனது நான்கு வயதில் பாலிவுட் சினிமாவில் நடிகை சரிகா நடிக்க ஆரம்பித்தார்.

பிறகு பல படங்களில் நடித்து தனது நடிப்பால் மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதனனையடுத்து நடிகர் கமலஹசனை நடிகை சரிகா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். பிறகு கணவர் கமலஹாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து சரிகா மும்மையில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சரிகாவின் தாயார் இறந்ததால் அவரின் சொத்துக்கள் அனைத்தும் அவரது குடும்ப நண்பரான டாக்டர் விக்ரம் தாகூர் என்பவருக்கு சென்றுவிட்டது.

இதனால் சரிகா வசிப்பதற்கு வீடு இன்றி தவித்து வந்துள்ளார். அப்போது நடிகர் அமீர்கான் சரிகாவுக்கு உதவி செய்துள்ளார் .

அமீர்கானின் தங்கையும் நடிகை சரிகாவும் நெருங்கிய தோழிகள் எனபதால் அமீர்கான் சரிகாவிற்கு உதவி புரிந்துள்ளார்.

சரிகாவின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் மும்மையில் தாய் தந்தையை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இவரின் இரண்டாவது மகளான அக்ஷராஹாசன் தனது தந்தையான கமலுடன் சென்னையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: