பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்ற பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், இந்திய அணிக்கு கிடைத்த சொத்தாக பார்க்கப்படுகிறார்
பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்ற சமயத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் மிதாலியிடன் உங்களுக்கு பிடித்த ஆண் வீரர் யார் என்ற கேட்ட கேள்விக்கு கடுப்பாகி, இதனை ஒரு ஆண் வீரரிடம் உங்களால் கேட்க முடியுமா என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ஆண்கள் அணியின் கேப்டன் கோஹ்லியின் ஃபிட்னஸ் தனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மிதாலி ராஜ் தெரிவித்துள்ளதாவது, “விளையாட்டு என்றாலே ஃபிட்னஸ் தான் முக்கியம். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.
கோஹ்லி வெற்றிக்காக போராடும் விதமும், அவரின் பேட்டிங், ஆக்ரோஷம் அனைத்தும் சிறப்பாக உள்ளதாகவும், அவரின் ஃபிட்னஸ் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

0 comments: