உலகநாயகன் நடிகர் கமல்ஹாசனின் மகளாக மட்டுமல்ல நடிகையாகவும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்துவந்தவர் ஸ்ருதிஹாசன்.
தற்போது பட வாய்ப்பு இன்றி உள்ள இவர் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்வரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன், மைக்கேல் கார்சலை தன் அம்மாவான சரிகாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். சரிகாவும், பூங்கொத்து கொடுத்து கார்சலை வரவேற்றார்.
தற்போது இந்த புகைப்படங்கள் பாலிவுட் ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. விரைவில் ஸ்ருதியும், மைக்கேலும் திருமணம் செய்ய இருப்பதாகவும், அதற்கான சந்திப்பாகத்தான் இது இருப்பதாகவும் கூறப்படுகிறது.

0 comments: