Sunday, 24 December 2017

எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல் அதிர்ச்சியை அளித்த தினகரன்..! முதல் விக்கெட்டை எடுத்தார்...!!


ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் 89, 013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தமிழக தேர்தல் வரலாற்றில் தினகரன் புதிய அத்தியாயம் படைத்துள்ளார்.

இது ஆளும் கட்சியான அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு முதல் அடி விழுந்துள்ளது.

இந்த அடி விழுவதற்குள் அடுத்த அதிர்ச்சியை அளித்துள்ளார் ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ தினகரன். இந்த வெற்றி மூலம் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து பலர் தினகரன் பக்கம் சாய உள்ளனர்.

அதன்படி முதல் அதிர்ச்சியாக வேலூர் எம்.பி செங்குட்டுவன் தினகரனை சந்தித்து அவருடன் இணைந்துள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: