Sunday, 24 December 2017

கணவன் கண் முன்னே மனைவியை பலாத்காரம் செய்த கந்து வட்டி கும்பல்..! வட்டி கட்டாததால் அட்டூழியம்...!!


ஐதராபத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் (46). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். நிரஞ்சன் தன்னுடைய முன்கோபம் காரணமாக எந்த வேலையிலும் நிரந்தரமாக இருந்ததில்லை.

கடைசியாக ஒரு அலுவலகத்தில் சுமார் 2 வருடங்கள் வேலை பார்த்து வந்தார். அங்கும் தனது முன்கோபம் காரணமாக வேலையை இழந்தார். ஆனாலும் தனது மனைவிக்கு தெரியாமல் கடன் வாங்கி சமாளித்து வந்தார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் மருத்துவ செலவிற்காக பக்கத்து வீட்டிரினரின் உதவியால் கந்து வட்டிக்காரரிடம் ரூ 1 லட்சம் கடன் வாங்கி உள்ளனர்.

அதன்பிறகுதான் கணவனுக்கு வேலை இல்லை என்பதே மன¬விக்கு தெரியவந்தது. ஆனாலும் எப்படியோ 2 மாதம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வந்தனர். அதன்பிறகு வட்டியை சரியாக கட்ட முடியவில்லை.

இந்த நிலையில் ஒரு திடீரென நிரஞ்சனின் வீட்டிற்கு வந்த கந்து வட்டி கும்பல் அவரது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனை தடுக்க வந்த கணவனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதனால் ஏற்பட்ட அவமானம் காரணமாக நிரஞ்சன் தனது மனைவி மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: