கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை சவுந்தர்யா. இவர் கடந்த 2004ம் ஆண்டு பா.ஜவுக்கு பிரசாரம் செய்ய சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இது இந்திய சினிமாவையே உலுக்கியது.
நடிகை சவுந்தர்யா பெங்களூரை பூர்வீகமாக கொண்டவர். நடித்து சம்பாதித்த சொத்துகள் பெங்களூரில் ஏராளமாக உள்ளது. இதனை அவரது உறவினர்கள் போலி ஆவணங்களை தயார் செய்து அபகரிக்க முயற்சிப்பதாக புகார்கள் எழுந்தது.
Êசவுந்தர்யா இறந்த பின்னர் கடந்த 2012ம் ஆண்டு அவரது மைத்துனி பாக்யலட்சுமி என்பவர் போலி ஆவணத்தை தயார் செய்து தனது பெயருக்கு மாற்றி விட்டார். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இது குறித்து பெங்களூரு லோக்ஆயுக்தா போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தங்களை கைது செய்யக்கூடாது என்று கோரி மனுதாக்கல் செய்தனர்.
ஆனால் வழக்கில் தவறு இருப்பது தெரியவந்ததால் நீதிபதி அவர்களின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனை தொடர்ந்து போலி ஆவணங்கள் மூலம் சொத்தை அபகரிக்க முயற்சித்த 4 பேரை போலீசார் கைது செய்ய உள்ளனர்.

0 comments: