Saturday, 9 December 2017

தாயை கொன்று அழகிகளுடன் உல்லாசமாக இருந்த தஷ்வந்த்..! தப்பி ஓடியும் விடாத காமஆசை...!!


கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் ஹாசினி என்ற சிறுமியை தஷ்வந்த் என்ற வாலிபர் பலாத்காரம் செய்து கொன்றார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் தாயான சரளாவையும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

தப்பி ஓடிய தஷ்வந்தை போலீசார் மும்பையில் வைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. போதை மற்றும் ஆபாச வலைதளத்தை பார்ப்பதில் அடிமையான தஷ்வந்த் அவ்வப்போது வளர்ப்பு தாயாரையும் பாலியல் ரீதியாக சீண்டி வந்துள்ளான்.

இதனால் தஷ்வந்த் வீட்டில் இருக்கும்போது சரளா வீட்டிற்கு செல்லவே பயப்படுவாராம். மேலும் ஹாசினி கொலை வழக்கில் சிறையில் இருந்த அவரை ஜாமீனில் வெளியில் எடுக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

ஆனாலும் மனைவியின் பேச்சை கேட்காமல் ஜாமீனில் வெளியில் எடுத்துள்ளார். ஜாமீனில் வந்தவர் தாயை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின்போதுதான் தாயையும் அடித்து கொன்று விட்டு மும்பை தப்பி சென்றுள்ளான்.

மேலும் தாயை கொன்று எடுத்து நகைகளை நண்பர்கள் மூலம் பணமாக்கி உள்ளான். அதனை வைத்து மும்பையில் விபசார அழகிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளான். இதனை அறிந்த போலீசார் அங்குள்ள விபசார புரோக்கர்கள் மூலம் தஷ்வந்தை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: