ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் வீரத்தமிழச்சி என பெயர் எடுத்தவர் ஜூலி என்ற ஜூலியானா. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னனர் தன்னுடைய பெயரை அவர் கெடுத்து கொண்டார்.
இதனால் தமிழக மக்கள் அவர் மீது இப்போது வரை செம கடுப்பில் உள்ளனர். மேலும் அவர் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை உடனுக்குடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு விளம்பரம் தேடி வந்தார்.
இந்த நிலையில், விமலுடன் மன்னர் வகையறா படத்தில் நடித்து முடித்துள்ளார். இது குறித்து அவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இது குறித்த புகைப்படம் வெளிவந்த பின்னர்தான் இந்த விஷயமே தெரியவந்தது.
அதே போல விஜயின் அடுத்த படத்தில் ஓவியா நடிக்க மறுத்த வேடத்தில் ஜூலி நடிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் ஜூலியும் வாயே திறக்காமல் உள்ளார். எந்த ஒரு விஷயத்தையும் சகட்டு மேனிக்கு பேசும் ஜூலியா இது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

0 comments: