ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ஆளும் கட்சியான அதிமுக அடுத்த இடத்தில் உள்ளது.
இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது,
Ñமக்கள் அதிமுகவை புறக்கணிக்கவில்லை. திமுகவைத்தான் புறக்கணித்து உள்ளனர். திமுகவுக்கு அனைத்து கட்சிகளுமே ஆதரவு அளித்தன. எங்களுக்கு அப்படி இல்லை. தினகரனை நாங்கள் இதற்கு முன்பு தலையில் தூக்கி வைத்து கொண்டாடினோம்.
அதே போல ஆர்.கே நகர் தொகுதியில் நாங்கள் இரட்டை இலைக்குத்தான் வாக்கு கேட்டோம் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். எனவே நாங்கள் மதுசூதனனுக்கு வாக்கு கேட்கவில்லை என மறைமுகமாக கூறி உள்ளார்.
இது ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இடையே இணக்கமான சூழ்நிலை இல்லை என்பதையே காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments: