Tuesday, 12 December 2017

பிக்பாசுக்கும் விஜய் டிவிக்கும் இடையே வெடித்த மோதல்...!! அடுத்த சீசன் சன் டிவியில்?


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையேயும் பெரிய ஹிட் அடித்தது. இதில் கலந்து கொண்ட ஓவியா பெரும் புகழ் பெற்றார். அதோடு அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஏதாவது ஒரு வகையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக முதல் சீசனுக்காக போடப்பட்ட செட்களை மாற்றும் பணி நடந்து வருகிறது. மேலைநாட்டு பாணியில் மாற்றப்படுகிறது.

அதோடு பிக்பாஸ் 2வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாவது சந்தேகமாக உள்ளது. இதற்கு விஜய் டிவிக்கும் பிக்பாஸ் தயாரிப்பாளரான என்டேமால் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட மோதலே காரணம் என்று கூறப்படுகிறது.

முதல் சீசனில் என்டேமால் நிறுவனம் விஜய் டிவிக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதற்கு விஜய் டிவி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

இதனால் அடுத்த சீசனை விஜய் டிவியை விடுத்து வேறு சன் டிவியில் ஒளிபரப்பலாம என யோசித்தது என்டேமால் நிறுவனம். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி கைவிட்டு சென்றால் பெரும் இழப்பு ஏற்படும் என உணர்ந்தது.

எனவே என்டேமாலின் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதோடு அடுத்த பிக்பாஸ் அடுத்த சீசனுக்கான வேலையும் தொடங்கிவிட்டது. அனேகமாக ஜனவரி முதல் வாரத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: