Sunday, 31 December 2017

ரஜினிகாந்தை மறைமுகமாக இயக்கும் அமித் ஷா..! பா.ஜவின் புகழாரத்திற்கு காரணம் இதுதான்...!!


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இன்று அதிரடியாக அறிவித்தார். இது தமிழக அரசியரலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பா.ஜவின் தமிழிசை, அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். மேலும் கமல், விவேக் உள்பட திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இதற்கு முன்பு ரஜினிகாந்த் அரசியல் குறித்து வாய் திறக்காதபோது கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் இப்போது வாய் வலிக்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இத்தனை நாள் அரசியல் குறித்து வாய் திறக்காத ரஜினி இப்போது பேசி உள்ளது. பல்வேறு தரப்பினர் இடையே கேள்வி எழுப்பி உள்ளது. அவரது பேச்சில் பகவத் கீதை மற்றும் இந்துத்துவா வெளிப்பட்டு இருந்தது.

இது எல்லாமே பா.ஜவின் கொள்கைகள். இதனால் ரஜினியை பா.ஜ தேசிய தலைவர் அமித் ஷா பின்னணியில் இருந்து இயக்குவதாக கூறப்படுகிறது. இதனால்தான் பா.ஜவினர் மாறி மாறி ரஜினியின் ரசிகர்களை போலவே பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: