நமது இந்திய கலாசாரத்தை பார்த்து வெளிநாட்டினர் வியந்து வரும் நேரத்தில் நாம் மேலைநாட்டு கலாசாரத்திற்கு அடிமையாகி வருகிறோம். அங்கு சாதாரணமாக காரை வாடகைக்கு எடுப்பதை போல மனைவியை வாடகைக்கு எடுக்கும் கலாசாரம் பரவலாக உள்ளது.
இந்த கலாசாரம் தற்போது மெல்ல இந்தியாவிலும் பரவி வருகிறது. மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் தொழில் நிமித்தமாக செல்லும் பிசினஸ்மேன்கள் அங்கு சில காலம் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அப்போது அவர்கள் தங்களுக்கு ஒரு தற்காலிக துணையை அமர்த்தி கொள்கிறார்கள். அவர்கள் வாடகை மனைவி என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மாத வாடகையும் நிர்ணயிக்கப்படுகிறது.
இவர்கள் அவர்களோடு சினிமா, ஷாப்பிங், படுக்கை உள்பட ஒரு மனைவி செய்யும் அனைத்து வேலைகளையும் செய்வார்கள். இந்த கலாச்சாரம் இப்போது சென்னையிலும் பரவி வருகிறது.
அவர்களுக்கு வாடகை மனைவியாக இருப்பவர் பெரும்பாலும் ஆந்திரா, மும்பை மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு என்று பெரிய நெட் ஒர்க் இயங்கி வருகிறது.

0 comments: