தினகரன் ஆர்.கே நகரில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் இந்த தோல்வி குறித்து அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது.
அப்போது யாரும் யாரையும் குறை சொல்ல கூடாது, யாரையும் குறிப்பிட்டு பேசக்கூடாது என நிர்வாகிகளுக்கு எடப்பாடி கண்டிஷன் போட்டுள்ளார்.
இதனால் நிர்வாகிகள் யாரும் பேசவில்லை. அப்போது கே.பி முனுசாமி,ஒபிஎஸ்,மதுசூதனன் மற்றும் வைத்தியலிங்கம் மட்டும் பேசியுள்ளனர்.
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என்று கூறிவிட்டு யாரையும் பேசவிடாமல் அவர்கள் மட்டும் பேசிகொள்கிறார்கள் என மற்ற நிர்வாகிகள் புலம்பியுள்ளனர்.
இதனையடுத்து கூட்டம் முடிந்தவுடன் சிலர் தினகரனை தொடர்பு கொண்டு கூட்டத்தில் நடந்ததை அப்படியே சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் தாங்கள் இப்பவே உங்கள் அணிக்கு மாறுவதற்கு தயார் என கூறியிருக்கிறார்கள்.
ஆனால் தினகரன் தரப்பினர் சசிகலாவிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என கூறியிருக்கிறார்கள்.
இதானல் தினகரன் சசிகலாவை சந்தித்த பின் தினகரன் அணிக்கு அணி தாவல் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

0 comments: