கும்கி படத்தின் மூலம் அறிமுகமாக தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் லட்சுமி மேனன். இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், நான் சிகப்பு மனிதன் உள்பட பல படங்களில் நடித்தார். இவர் நடித்த பல படங்கள் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது, ஆனால், இவரின் உடல் எடை கூடியதால் பட வாய்ப்பு பாதியாக குறைந்தது.
இடைப்பட்ட காலத்தில் தன் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தது. தயாரிப்பாளர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை தற்போது ஆளே மாறிவிட்டார்.
உடல் எடை குறைத்து சமீபத்தில் லட்சுமி மேனன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது, மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

0 comments: