Saturday, 6 January 2018

திருமணமான 15 நிமிடத்தில் மாப்பிள்ளை ஏற்பட்ட துயரம்..! இந்த கொடுமை எங்காவது கண்டதுண்டா...!!


ரராஜஸ்தானை சேர்ந்தவர் சஜ்ஜன்சிங். 40 வயதுக்கு மேல் ஆன இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நீண்ட நாட்களாக பெண் தேடியும் கிடைக்கவில்லை.

இதனை அறிந்த அனிதா என்ற பெண் இவரை தொடர்பு கொண்டார். தான் காஜல் என்ற பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறினார். இதற்காக தனக்கு ரூ 50 ஆயிரம் மற்றும் புரோக்கருக்கு ரூ 2 லட்சம் தர வேண்டும் என்று கூறினார்.

நீண்ட நாட்களாக திருமணம் நடக்காத ஏக்கத்தில் இருந்த சஜ்ஜன் சிங் அவர்களின் நிபந்தனையை ஏற்று கொண்டார். அதன்படி டிசம்பர் 30ம் தேதி திருமணம் நடப்பதாக முடிவு செய்யப்பட்டு நடந்து முடிந்தது.

மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய சிறிது நேரத்தில் அனிதா மற்றும்ம புரோக்கருக்கு பணம் கைமாறியது. பணம் வாங்கியவுடன் இருவரும் ஏதோ காரணம் அங்கிருந்து நைசாக தப்பி சென்றனர்.

பின்னர் திருமணம் நடந்த மகிழ்ச்சியில் சஜ்ஜன் சிங் புதுமனைவியை காரில் அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார். வழியில் போலீசாரை பார்த்த அந்த பெண் தன்னை கடத்தி செல்வதாக கூறி கத்தி கூச்சலிட்டாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இது அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில் அனிதா என்ற பெண் தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. தன்னை 10 நிமிடம் மட்டுமே நடிக்க அழைத்து வந்ததாகவும், அதற்கு ரூ 10 ஆயிரம் கொடுத்தாக கூறினார்.

மேலும் தன்னை காரில் அவரது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதால் உதவி கேட்டு கூச்சல் போட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து தப்பி ஓடிய அனிதா மற்றும் புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: