ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் இப்ராகிம். இவர் இதே பகுதியை சேர்ந்த நஸ்ரின் என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்தனர்.
ணூகாவல் நிலையத்திற் வந்த நஸ்ரினின் பெரியப்பா, நஸ்ரினிடம் பேச முயன்றார். இதனை பார்த்த இப்ராகிம் பேச விடாமல் தடுத்தார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் பெண் வீட்டார் தரப்பில் பேச வந்த மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஷானவாஸ் இப்ராகிமின் அப்பா ஹனீபாவை அடித்தார். அப்போது தான் வைத்திருந்த மான்கொம்மை எடுத்து ஷானவாஸ் வயிற்றில் குத்தினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் ஷனவாசை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அந்த இடமே கலவர இடம் போல காட்சி அளித்தது. இதனை எல்லாம் பார்த்து கொண்டிருந்த காதல் ஜோடி செய்வதறியாது திகைத்து நின்றனர்.

0 comments: