திருச்சி மாவட்டம் எரகுடியை சேர்ந்தவர் சரண்யா (19). கல்லூரியில் இரண்டாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் அவரது தாய்மாமன் விஜய் என்பவரை காதலித்து வந்தார்.
கடந்த 1ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் விஜய் வீட்டின் மாடியிலேயே தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
விஜய்க்கு சரண்யாவை தவிர வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இதனை தெரிந்து கொண்ட சரண்யா, இது குறித்து கேட்டார். நேற்று முன்தினம் இது தொடர்பாக நள்ளிரவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த விஜய் சரண்யாவின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்தார். அடுத்த நாள் காலை விஜயின் பெற்றோர் பார்த்தபோது சரண்யா கொலை செய்யப்பட்டு கிடக்க விஜய் அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
விஜயை கைது செய்த போலீசார் விசாரித்தபோது, சரண்யாவுக்கு ஏற்கனவே பலருடன் கள்ள தொடர்பு இருந்தது. இதனால் அவரை கொலை செய்தேன் என கூறி உள்ளார்.

0 comments: