Tuesday, 2 January 2018

2018ல் புரட்டி போடப்போகும் பயங்கர நிலநடுக்கம், சுனாமி..! எரிமலை வெடித்து ஒரு நகரமே தரைமட்டமாகி விடும்...!!


2018ல் புத்தாண்டு பிறந்த உடனேயே இந்த வருடம் எப்படி இருக்கும், என்னென்ன நடக்கப்போகிறது என்ற கணிப்புகள் வரத் தொடங்கி விட்டன. அதன்படி புவியியல் ஆய்வாளர்கள் இந்த ஆண்டு என்ன நடக்கப்போகிறது என்ற தனது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு உள்ளார்கள்.

அதன்படி பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால், மைய விலக்கு விசை குறைந்து பூமிக்கோளின் பூமத்திய ரேகை இறுக்கமாகும்.

இதனால் பூமித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதி உடையும் அபாயம் உள்ளது. இந்த பாதிப்பால் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சமீப ஆண்டுகளாக 7.5 ரிக்டர் அளவுக்கு மட்டுமே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் வரை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இது மிகப்பெரிய ஆபத்தாக கருதப்படுகிறது. அது மட்டும் அல்ல இந்த ஆண்டு இதுபோன்று 20க்கும் மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 9 புள்ளிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டால் பூகம்பம் ஏற்பட்ட மறு நிமிடமே அந்த நகரமே தரைமட்டமாகி விடும்.

இந்த நிலநடுக்கமானது உலக அளவில் மேற்கு அமெரிக்கா, தெற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது தவிர அதிதீவிர சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் எரிமலைகளும் வெடித்து சிதறும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: