உலக பிரபலங்களின் செலவுகள் சாதாரண நபாரால் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாததாக இருக்கும். அதுபோல உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ள அம்பானியின் மனைவி நீத்தா அம்பானியின் செலவும் மிக ஆடம்பரமாக உள்ளது.
இவரது செலவு ஒரு ஊருக்கே விருந்து வைக்கும் அளவுக்கு உள்ளது. அல்லது ஒரு ஊருக்கு ஏதாவது ஒரு நலத்திட்ட உதவி செய்து விட முடியும். இவர் குடிக்கும் ஒரு கப் டீயின் விலை மட்டும் ரூ 3 லட்சம். இந்த டீ உலக புகழ்பெற்ற மாரிடெக் நிறுவனத்தின் தயாரிப்பு. மேலும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஒரு பாக்கெட்டில் 50 பொட்டலங்கள் மட்டுமே இருக்கும். இந்த பாக்கெட்டின் விலை சுமார் ஒன்றரை கோடி ரூபாய். மேலும் அவர் கட்டி இருக்கும் கடிகாரங்கள் அனைத்தும் உலக புகழ் பெற்ற நிறுவனங்களின் தயாரிப்பே. ஒவ்வொன்றும் பல லட்சம் மதிப்புடையவை
இவர் வைத்திருக்கும் கைப்பை உலக புகழ்பெற்ற டிசைனர்களால் உருவாக்கப்பட்டது. இந்த கைப்பையின் விலை ரூ 35 முதல் 40 லட்சம் ரூபாய் மதிப்புடையது. அதே போல இவர் அணியும் செருப்புகளும் ஒரு லட்சம் முதல் பல லட்சம் மதிப்புடையது. கார்ட்டோ, கார்சியா, டைமேட்டா, மேர்லின் கம்பெனி தயாரிப்புகள் ஆகும்.
இவர் உபயோகப்படுத்தும் செல்போன் மட்டும் ரூ 350 கோடி மதிப்புடையது என்பது ஏற்கனவே தெரிந்த விஷயமாகும். இது மட்டுமே இவ்வளவு செலவு என்றால் மற்ற செலவுகள் எவ்வளவு என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இவர்கள் வீட்டின் செலவுகளை கணக்கிட்டால் ஒரு மாநிலத்திற்கே பட்ஜெட் போடலாம் போல உள்ளது.

0 comments: