மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ரூப்தாஸ். 60 வயதான இவரது மனைவி கடந்த 1992ம் ஆண்டு இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை. எனவே இறுதி காலத்தில் ஒரு பெண் துணை இருந்தால் நன்றாக இருக்கும் என கருதினார்.
எனவே இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார். இது குறித்து தனது நண்பர்களிடம் கூறி பெண் தேடி கொண்டிருந்தார். அப்போது அவரிடம் நண்பர்கள் மூலம் அசோக் என்பவர் அறிமுகமானார்.
அவர் தன்னிடம் 40 வயதான விதவை பெண் இருப்பதாக கூறினார். அதன்படி பூஜா என்ற பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்தார். இருவருக்கும் கடந்த நவம்பர் 22ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த உடனேயே ரூப்தாஸ் வீட்டின் சாவிகளை மனைவியிடம் கொடுத்து விட்டார். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அதாவது நவம்பவர் 27ம் தேதி பூஜா ரூப்தாஸ் வீட்டில் இருந்த ரூ 3 லட்சம் ரொக்கம், ரூ 1 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடி சென்று விட்டார்.
இது குறித்து ரூப்தாஸ் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் பெண் பார்த்து கொடுத்த அசோக்கை கைது செய்தனர். பின்னர் அவர் மூலம் பூஜாவையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ 5 ஆயிரம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பூஜாவின் உண்மையான பெயர் ஹேமா என தெரியவந்தது. அவரின் அண்ணன் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

0 comments: