Wednesday, 17 January 2018

நடிகர் நெப்போலியன் என்ன ஆனார் தெரியுமா? அமைச்சரான பிறகு என்ன செய்தார்...!!


தமிழ் சினிமாவில் உள்ள உயரமான நடிகர்களில் ஒருவர் நடிகர் நெப்போலியன். திருச்சியை சேர்ந்தவரான இவர் சினிமா ஆசையில் பட்டப்படிப்பை முடித்தவுடன் சென்னை வந்தார். பின்னர் பாரதிராஜாவின் புதுநெல்லு புதுநாத்து படத்தில் அறிமுகமானார்.

அதன்பிறகு பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கினார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

பின்னர் திமுகவில் இணைந்து ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தார். இதனால் திமுகவில் சீட் கிடைத்து வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார்.

அதன்பிறகு கடந்த 2009ல் பெரம்பலூர் தொகுதியில் வெற்றி எம்.பியாகி மத்திய அமைச்சராகவும் இருந்தார். தற்போது அமெரிக்காவில் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: