சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறி உள்ளார். இவரது அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். மேலும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் ரஜியின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்கப்பட்டது. இது குறித்து அவர் கூறும்போது,
அஜனநாயக நாட்டில் யாருக்கும் அரசியல் கட்சி ஆரம்பிக்க உரிமை உள்ளது. ரஜினிகாந்த் கட்சி துவங்குவது பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல மாட்டேன்.
ஆன்மிக அரசியல் என்பதை என்ன பொருளில் சொன்னார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார். வைகோ யாருக்கு ஆதரவு தருகிறாரோ அவரது அரசியல் நிலை கேள்விகுறியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: