Sunday, 31 December 2017

திருடு போன நகைகளை நள்ளிரவில் கதவை தட்டி திருப்பி கொடுத்த போலீசார்..! காவல்துறையின் புத்தாண்டு பரிசு...!!


பொதுவாக புத்தாண்டு அன்று நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்துக்களோடு பரிசுகளை அளிப்பது வழக்கம். அந்த வகையில் பெங்களூரு போலீசார் பொதுமக்களுக்கு புதுவிதமான சர்ப்ரைஸ் பரிசு கொடுத்துள்ளனர்.

அதன்படி பெங்களூரு போலீசார் கோர்ட்டின் சிறப்பு அனுமதி பெற்று இந்த செயலை செய்து உள்ளனர். அதன்படி பெங்களூரு எலகங்கா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மஞ்சேகவுடா, வெங்கடேஷ் தம்பதிகள் சமீபத்தில் தனது வீட்டில் 40 கிராம் நகைகளை திருட்டு போயிருந்தது.

அதனை திருட்டு ஆசாமிகளிடம் இருந்து பறிமுதல் செய்து இருந்தனர். இந்த நகைகளை எல்லாம் கோர்ட்டின் சிறப்பு அனுமதி பெற்று நேற்று நள்ளிரவில் மஞ்சேகவுடா வீட்டின் கதவை தட்டி திருட்டு போன நகைகளை திருப்பி அளித்தனர்.

புது வருட தொடக்கத்தில் கிடைத்த நகைகளால் அவர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.

அதேபோல அதே போல பொம்மனஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேசும், நந்தகிஷோர் என்பவரின் வீட்டிற்கு சென்று அவர் பறிகொடுத்த 3 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருப்பி கொடுத்தார்.

பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமாரின் உத்தரவின் பேரில் இந்த புது வருட கிப்ட் கொடுக்கப்பட்டது.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: