Thursday, 11 January 2018

நடிக்க வேண்டும் என்பதற்காக விஜய் செய்த முதல் காரியம்..! தந்தை என்ன சொன்னார்...!!


இளையதளபதி இன்று தமிழ் சினிமாவில் எந்த உயரத்தில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே போல அவர் சினிமாவில் எப்படி காலடி எடுத்து வைத்தார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அவர் நடிப்பை தேர்ந்தெடுத்ததும் தனது தந்தையிடம் சென்று விருப்பத்தை தெரிவித்து உள்ளார். அதற்கு அவரது தந்தை முதலில் எதாவது ஒன்றை உனது நண்பர்களிடம் நடித்து காட்டு. நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என என்னிடம் வந்து கூறு என்றார்.

அதன்படி விஜய் தனது நண்பர்களிடம் அண்ணாமலை படத்தில் வரும் ரஜினியின் வசனத்தை பேசி நடித்து காட்டி உள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் அருமையாக உள்ளது என பாராட்டி உள்ளனர்.

இதனையே தனது தந்தையிடமும் பின்னர் நடித்து காட்டி அசத்தி உள்ளார். அதன்பிறகே தனது மகன் மீது நம்பிக்கை வந்து நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகப்படுத்தினார். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: