நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக தெரிவித்து விட்டார். ஆனால் கட்சி எப்போது ஆரம்பிப்பேன் என கூறவில்லை. தற்போது ஒரு வார இதழ் ஒன்றில் அரசியல் குறித்து எழுதி வருகிறார். இதில் அரசியல் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த வார இதழில் அவர் கூறியதாவது, நான் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த பின்னர் பல எதிர்வினைகளை சந்தித்து வருகிறேன்.
நான் கட்சி தொடங்கப்போவதை தாமதப்படுத்து பயத்தினால் அல்ல, சிரத்தையினால். நான் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த உடன் பலரும் என்னிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அதே போல என் மகள் ஸ்ருதியும் அரசியல் கட்சி ஆரம்பித்தால் உங்கள் மகள் என்ன ஆவாள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நான் உன் அப்பா அப்பயேத்தான் இருப்பார். கொஞ்சம் நரை கூடிட்டா அப்பா இல்லை என்று ஆகி விடுமா என்றேன்.
என்னை உனக்கு அப்பாக தெரியுமா? உலக நாயகனாக தெரியுமா? அதே அப்பாவாகத்தான் இருப்பேன் என்றேன்.
மேலும் அவள் நீங்கள் கலைஞன் என்பது முக்கியம் இல்லையா என்றேன். அதற்கு நான் அது எப்போதும் மாறவே மாறாது என்றேன் என்று கூறி உள்ளார்.

0 comments: