Monday, 22 January 2018

ஒரு வழியாக நடந்து முடிந்தது பிரபல நடிகையின் திருமணம்...!!


நடிகை பாவானாவும் கன்னட தயாரிப்பாளர் நவீனும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடந்தது. 2017 அக்டோபரில் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் பாவனாவை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார் என செய்திகள் வெளியாகியது. இது தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

அக்டோபரில் நடைபெறுவதாக இருந்த திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. திருமணம் தள்ளி வைப்பதற்கு நவீன்தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை பாவனா மறுத்து வந்தார்.

மேலும் நவீனின் தாயார் இறந்ததால் திருமணம் தள்ளி வைக்கப்பட்து என்று பாவனாவின் பெற்றோர் விளக்கம் அளித்தனர். அதன்பிறகு டிசம்பர் 22ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது

பின்னர் ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஜனவரி 22ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக நடிகை பாவனாவே ஒரு நேர்க்காணலில் தெரிவித்து இருந்தார்.

அதோடு திருமணம் மார்ச் அல்லது ஏப்ரலில் நடக்கும் என்ற செய்திகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் திருமணம் நிச்சயக்கப்பட்ட  தேதிக்கு 2 நாள் முன்னதாகவே அதாவது ஜனவரி 21ம் தேதியே நடிகை பாவனாவின் திருமணம் கேரளாவில் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: