குடும்ப பிரச்னைகளை மையமாக வைத்து படம் எடுப்பதில் கில்லாடி நடிகர் இயக்குனர் விசு. இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு, திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி ஒரு கண்மணி, சிதம்பர ரகசியம் போன்ற படங்கள் இன்றளவும் ரசிக்கப்படும் படங்களாகும்.
1945ம் ஆண்டு பிறந்த விசுவின் முழு பெயர் எம்.ஆர்.விஸ்வநாதன். இவர் இயக்குனர் இமயம் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவர் கடைசியாக இயக்கி நடித்த படம் தங்கமணி ரங்கமணி.
அதன்பிறகு சன் டிவியில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் ஜெயா டிவியில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியை நடத்தினர். அதோடு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த இவருக்கு தற்போது 72 வயதாகிறது.
விசுவுக்கு உமா என்ற மனைவியும் 3 மகள்கள் உள்ளனர். 3 மகள்களுமே திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டனர். விசுவும் தற்போது வயது மூப்பு காரணமாக அமெரிக்காவில் மகள் வீட்டில் தங்கி இருந்து ஓய்வெடுத்து வருகிறார்.

0 comments: