Monday, 1 January 2018

ரஜினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..! கர்நாடகாவில் என்னென்ன வாங்கி உள்ளார்...!!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம்தான் தற்போதைய பரபரப்பான பேச்சாக உள்ளது. இவரது அறிவிப்புக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்து ஃபின்ஆப் தகவல் வெளியியிட்டுள்ளது. அதில் அவது சொத்து மதிப்பு மொத்தம் ரூ 360 கோடி என குறிப்பிட்டுள்ளது.

ரஜினிகாந்தின் வருவாயில் குறிப்பிட்ட அளவு பங்குகள் தொண்டு நிறுவனங்களுக்கு செல்வதாக கூறப்படுகிறது. அதே நேரம் அவர் நடித்த படம் சரியாக வசூலிக்கவில்லை என்றால் குறிப்பிட்ட அளவு பணத்தை திரும்ப அளித்து வருகிறார்.

சராசரியாக படத்தில் நடிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ 55 கோடியும், பங்குகள் மூலம் ரூ 110 கோடி கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. ஆண்டு வருமான வரியாக ரூ 13 கோடி கட்டுகிறார்கள். இவரிடம் இருக்கும் 3 ஆடம்பர கார்களின் மதிப்பு மட்டும் ரூ 2.5 கோடி ஆகும்.

போயஸ் கார்டனில் உள்ள  அவரது வீட்டின் மதிப்பு மட்டும் ரூ 35 ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அவர் ரூ 216 கோடி ரூபாய் ஈட்டி உள்ளார். 2016ல் மட்டும் 65 கோடி ருபாய் சம்பாதித்து உள்ளார்.

மேலும் கர்நாடக மாநிலத்திலும் பல்வேறு சொத்துகள் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூரில் அபார்ட்மென்ட்டுகள், நட்சத்திர ஓட்டல்கள் இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: