Tuesday, 16 January 2018

சுவர் ஏறி குதித்து தப்பி சென்ற நடிகர் சூர்யா..! விடாமல் துரத்தி வந்த ரசிகர்கள்...!!


நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இவருக்கு தமிழகம் தாண்டி ஆந்திராவிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. எனவே தானா சேர்ந்த கூட்டம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் நடந்து வருகிறது. அதுபோல தெலுங்கானாவில் ஒரு தியேட்டருக்கு புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார்.

அவரை காண ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடி விட்டது. இதனால் செய்வதறியானது திகைத்த நடிகர் சூர்யா. அவர்களிடம் இருந்து தப்பிக்க தியேட்டரின் முன்கதவு கேட் வழியாக ஏறி குதித்து காரில் ஏறி தப்பி சென்றார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: