தமிழ் சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்து காமெடி நடிகராக அறிமுகமானவர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் தற்போது பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிகர் என்பதை தாண்டி ஒரு டப்பிங் கலைஞர். இவர் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார். இதை அவரது மகளும் தற்போது தமிழில் வெளியாகும் சில படங்களுக்கு தனது டப்பிங் பணியை செய்து வருகிறார்.
இந்த நிலையில் தனது அப்பாவுக்கு நியூ இயர் சர்ப்ரைஸ் பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக கண்ணை கட்டி கொண்டு பெசன்ட் நகர் பீச்சில் ராயல் என்பீல்டு புல்லட் வண்டியை பரிசாக கொடுத்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத எம்.எஸ். பாஸ்கர் தனது மகளை கட்டி கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டார்.


0 comments: