Wednesday, 10 January 2018

கவுதமியின் முதல் கணவர் யார் தெரியுமா? அவர் ஏன் கமலுடன் குடும்பம் நடத்தினார்...!!


ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் கவுதமி. இவர் கடந்த 1987ம் ஆண்டு தெலுங்கில் தயமாயுடு என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் 1988ம் ஆண்டு தமிழில் ரஜினியின் குருசிஷ்யன் படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்தபோது அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது.

1998ல் சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபரை கவுதமி காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1999ம் ஆண்டு சுப்புலட்சுமி  என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதே வருடம் கருத்துவேறுபாடு காரணமாக சந்தீப்பாட்டியாவை விட்டு பிரிந்தார். அதோடு அவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்றார்.

சில நாட்களில்  கவுதமியின் பெற்றோரும் மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து சில நாட்கள் மகளுடன் தனியாக வசித்து வந்தார். அதன்பிறகு கமலுடன் இருந்து நட்பு காதலாக மாற இருவரும் கடந்த 2005 முதல் சேர்ந்து வாழ தொடங்கினர்.

கிட்ட தட்ட சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் கமலை விட்டு பிரிந்து வந்து விட்டார். மகளின் நலன் கருதி கமலை பிரிந்ததாக கவுதமி தெரிவித்துள்ளார். தற்போது கவுதமி மகளுடன் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: