தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. தற்போது ராஜா ராணி, பூவே பூச்சூடவா போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் பிரிவே«£ம் சந்திப்போம், தங்கம் இளவரசி போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து பல வாய்ப்புகளை பெற்று வரும் ஸ்ரீதேவி எம்.எஸ்சி கிரிமினாலஜி படித்துள்ளார்.
சிஐடி ஆவது இவரது கணவாகும். ரூநடிப்பு மற்றும் படிப்பு ஆகிய இரண்டுக்கும் நடுவில் இவர் குடிசை தொழில் ஒன்றையும் செய்து வருகிறார். வீட்டில் இருந்தே தனது தாயாருடன் சேர்ந்து ஊறுகாய் தயாரித்து வருகிறார்.
மேலும் இதனை ஆச்சி மசாலா, சக்தி மசாலா போல பெரிய பிராண்ட் ஆக்கி மார்க்கெட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு இவரது குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அடுத்த ஆண்டிற்குள் பெரிய ஊறுகாய் கம்பெனி ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

0 comments: