முதலிரவில் மணமகளை மணமகன் கொடூரமாக தாக்கிய சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக போலீசார் மணமகனை கைது செய்து விசாரித்தனர்.
அதில் மணமகன் ராஜேஷ் கூறும்போது, திருமணம் முடிந்த முதலிரவு அறைக்கு நாங்கள் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டோம். அப்போது நான் எனது மனைவியிடம் எனக்கு ஆண்மை குறைவு உள்ளது. இதனை வெளியில் யாரிடமும் கூறி விடாதே என்று கூறினேன்.
இதனை கேட்ட மமணமகள் இதனை ஏன் மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கதறி அழுதாள். நான் யாரிடமும் இதனை சொல்லதே என்று கேட்டு கொண்டேன்.
ஆனால் என் வாழ்க்கையே போய் விட்டது என்று கூறி வெளியில் சென்றவள் உறவினர்கள் அனைவரிடமும் சொல்லி விட்டாள். பின்னர் மீண்டும் அறைக்குள் வந்துள்ளாள். அப்போது ஏன் இதனை எல்லோரிடமும் சொன்னாய் என்று கேட்டேன்.
இது தொடர்பாக இருவருக்கும் வாக்கும் வாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் அந்த பெண்ணை பிளேடால் தாக்கியதாக கூறி உள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக ராஜேஷ் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணமகனுக்கு குறை இருப்பது திருமணத்திற்கு முன்பே தெரியும் எனவும் ராஜேஷ் கூறி உள்ளார்.

0 comments: