Sunday, 21 January 2018

ஜூலி எல்லாம் ஹீரோயின் ஆயிடுச்சு..! நான் என்ன பாவம் பண்ணினேன்..! புலம்பும் என்னம்மா ராமர்...!!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார் ஜுலி. இவர் தற்போது உத்தமி என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த தகவல் வந்தபிறகு பலவிமர்சனங்கள் வருகிறது.

இதுபற்றி என்னம்மா ராமர் பேட்டியின்போது கூறுகையில், ஜுலி கதாநாயகியாக்குறார் என்றால் அந்த படத்தின் கதைக்கு தேவைப்பட்டிருக்கும் என்றார்.

அதேபோல் என்னை கதாநாயகனாக வைத்து கூட யாராவது எடுத்தால் நல்லாத்தான் இருக்கும் என்றார். கதாநாயகியாக யாரை வைப்பீர்கள் என்ற கேள்விக்கு, கீர்த்தி சுரேஷ் என்று கூறினார்.

உடன்இருந்த வடிவேல் பாலாஜி கலாய்த்ததும், காமெடிக்காக கூறினேன் கதாநாயகனாகும் எண்ணம் எல்லாம் இல்லை, நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் போதும் என்று கூறியுள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: