மேலை நாடுகளில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழும் முறை உள்ளது. இதற்கு லிவிங் டூ கெதர் முறை என்பார்கள். அதேபோன்ற ஒரு முறை இந்தியாவில் உள்ள கிராமத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.
Óராஜஸ்தான் மாநிலத்தில்தான் இந்த விசித்திர கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வாழும் கரிசியா பழங்குடியின மக்கள்தான் இந்த வினோத முறையை பின்பற்றி வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ளவர் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளா விட்டாலும் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம்.
இந்த கிராமத்தில் ஆண்தான் வரதட்சணை கொடுக்க வேண்டும். திருமணம் செய்து கொண்டாலும் சரி, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தாலும் சரி ஆண்தன் வரதட்சணை கொடுக்க வேண்டும்.
சேர்ந்து வாழும் துணைகளுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது. கண்டிப்பாக குழந்தை பெற்று கொள்ள வேண்டும்.
அவர்களால் குழந்தை பெற்று கொள்ள முடியாவிட்டால் வேறு ஒரு துணையை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டுமாம். இந்த முறை இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

0 comments: