வளர்ந்து வரும் நவீன காலத்திற்கு ஏற்ப கலாசாரமும் மெல்ல சீரழிந்து வருகிறது. படிப்பு செலவுக்காக கல்லூரி பெண்கள் புது புது யுக்தியை கையாண்டு வருகிறார்கள். அதன்படி தனிமையில் வாடும் வயதான நபர்களுடன் கல்லூரி மாணவிகள் டேட்டிங் சென்று சாம்பாதித்து வருகின்றனர்.
இது இங்கிலாந்தில் நடக்கிறது. இங்கு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் தாங்கள் பொருளாதார மற்றும் படிப்பு செலவுக்காக ஷிமீமீளீவீஸீரீகிக்ஷீக்ஷீமீஸீரீமீனீமீஸீt.நீஷீனீ மற்று என்னும் இணையதளத்தை நாடுகின்றனர்.
இந்த இணையதளமே டேட்டிங் செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த இணைய தளம் மூலம் டேட்டிங் செல்லும் வயதான நபர்களுக்கு சுகர் டேடிஸ் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த அவர்களுடன் டேட்டிங் செல்லும் இளம்பெண்ளை சுகர் பேபி என்று அழைக்கிறார்கள்.
இது குறித்து டேட்டிங் செல்லும் மாணவி பெல்லா என்பவர் கூறும்போது, குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று எனது தகவலை பதிவு செய்து கொண்டேன். அதன்பிறகு 39 வயது மற்றும் 46 வயதுடைய தொழிலதிபர்கள் என்னை தொடர்பு கொண்டனர்.
அவர்களுடன் முதல் நாள் காபி ஷாப் மற்றும் வெளியிடங்களுக்கு சென்றேன். அதன்பிறகு தற்போது தினமும் அவர்களுடன் வெளியில் சென்று வருகிறேன். இதற்காக அவர்கள் எனக்கு தினமும் 400 டாலர்கள் வரை தருகிறார்கள். மேலும் எனது படிப்பு செலவையும் அவர்கள்தான் பார்த்து கொள்கிறார்கள் என்றார்.
இந்த இணையதளத்தில் 2017ம் ஆண்டில் மட்டும் 75 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதுவரை 30 லட்சம் மாணவிகள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: