Sunday, 7 January 2018

பிச்சை எடுத்த விஜய் பட நடிகர்..! காப்பாற்றி மறுவாழ்வு கொடுத்த அஜித் ரசிகர்கள்...!!


காதல் படத்தில் விருச்சிககாந்தாக நடித்து புகழ் பெற்றவர் பல்லு பாபு. நடிச்சா ஹீரோ சார்.. அப்புறம் கொஞ்சம் அரசியல் டெல்லி.. சி.எம் அதுபோதும் சார் என்ற ஒரே டயலாக்கின் மூலம் பெரும் புகழ் பெற்றவர். இதனை அடுத்து விஜயின் வேட்டைக்காரன் போன்ற சில படங்களில் நடித்து இருப்பார்.

அதன்பிறகு வாய்ப்புகள் வரவில்லை. அவரது பெற்றோர் இறந்து விட, உடன் பிறந்தவர்களின் ஆதரவு இல்லாமல் சென்னையில் கோயிலில் பிச்சை எடுத்து வந்தார். இது குறித்து நமது லைவ் டே உள்பட பல ஊடகங்களில் செய்திகள் வந்தது.

இதனை பார்த்த பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா மற்றும் பழைய வண்ணாரபேட்டை பட இயக்குனர் மோகன் ஆகியோர் 2 நாட்கள் தேடி அலைந்து ஒரு கோயிலில் கண்டுபிடித்து மீட்டனர்.

தற்போது தங்களது பாதுகாப்பில் வைத்து இருக்கும் இவர்கள் பல்லு பாபுவுக்காக சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் அஜித்தின் தீவிர ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வீடியோ ஒன்றும் வெளியிட்டு உள்ளனர். அதில் பல்லு பாபுவும் தனக்கு சினிமா வாய்ப்புகள் தந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இததை தொடர்ந்து பல்லு பாபுவுக்கு சில சினிமா வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: